Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹெல்மெட் அணியாமல் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

ஜுலை 04, 2019 11:13

சென்னை: சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர்களின் வீட்டுக்கே அபராத தொகைக்கான ரசீதை காவல் துறையினர் அனுப்பி வைக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்களில் காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதை பின்பற்றாதோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது. 

 மேலும் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையடுத்து போலீஸாரும் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டனர்.  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மடக்கி அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். வாகனத்தில் பின் சீட்டில் அமர்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறையை மீறுவோரையும் போலீஸார் விட்டு வைப்பதில்லை.

 இந்த நிலையில் சென்னை அண்ணா நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வீட்டுக்கே அபராத தொகை ரசீதை காவல் துறையினர் அனுப்பி வருகின்றனர். விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுக்கும் வகையில் அண்ணா நகரில் நவீன கேமிரா நிறுவப்பட்டுள்ளது. தப்பிவிடலாம்னு நினைக்காதீங்க பதிவான வாகன எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அபராத ரசீதை போலீஸார் அனுப்பி வைக்கின்றனர். இதனால் இனி போக்குவரத்து விதிகளை மீறிவிட்டு தப்பிவிட்டோம் என நினைக்காதீர்கள்

தலைப்புச்செய்திகள்