Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் – சி ஆர் சரஸ்வதிக்கு முக்கியப் பதவி

ஜுலை 05, 2019 05:57

சென்னை : அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியதால் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார் டிடிவி தினகரன்.

திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய முக்கிய நிர்வாகிகளை இழந்துள்ளது. இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது.


புதிய நிர்வாகிகள்
அமமுகவின் துணைப் பொதுச் செயலாளர்கள் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் ரங்கசாமி
பொருளாளர் – வடசென்னை வெற்றிவேல்
தலைமை நிலையச் செயலாளர் - முன்னாள் அரசு கொறடா ஆர். மனோகர் 
கொள்கை பரப்புச் செயலாளர் - சி.ஆர்.சரஸ்வதி 

 அமமுகவை கட்சியாக பதிவு செய்த டிடிவி தினகரன் ஏற்கனவே வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியலில் சில மாற்றங்களை செய்து  இப்போது கட்சியின் நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்