Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி - ஓராண்டு சிறை

ஜுலை 05, 2019 06:03

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் அவர் குற்றவாளி என சற்றுமுன் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, விடுதலைபுலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் அவருக்கு ரூ,10,000 அபராதமும் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வைகோ ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆவதில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்