Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்ஜெட் 2019: திருப்பூர்வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா

ஜுலை 05, 2019 06:32

திருப்பூர்: இன்று தாக்கல் செய்யவிருக்கும் மத்திய முழு பட்ஜெட்டில், இந்தியாவின் டாலர் சிட்டி எனப் போற்றப்படும் திருப்பூர் நகர வாசிகளும் தங்கள் ஊரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பட்ஜெட்டில் அத்தியாவசிய மருத்துவ வசதிகள், தொழில் வளர்ச்சிக்கு உதவும் ஆராய்ச்சி நிலையங்கள் போன்றவை இருந்தால் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளோடு போட்டி போட்டு ஏற்றுமதியை உயர்த்த பெரும் உதவிகரமாக இருக்கும் என்பதே திருப்பூர் வாசிகளின் எதிர்பார்ப்பாகும். ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரியாக 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதோடு, லாபமும் குறைகிறது. தற்போது விதிக்கப்படும் 3 சதவிகிதமாகவோ அல்லது வரி விலக்கும் அளித்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று திருப்பூர் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற நகரம் என்ற பெயரை, ஜப்பான் நாட்டிடம் இருந்து தட்டிப்பறித்த திருப்பூர் நகரம். இன்றைக்கு இந்தியாவின் அந்நியச்செலாவணி வருமானத்தில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் திருப்பூர் நகரமே கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பது திருப்பூர் மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் பெருமைதான்.

 ஆயிரம் கோடி ஏற்றுமதி இன்றைக்கு ஜப்பான் மற்றும் சீனா போன்ற மிகவும் வளர்ந்த நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் கடும் சவாலையும் போட்டியை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரே நகரம் திருப்பூர் மட்டுமே. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்து முன்னணி நகரமாக திகழ்கிறது.

ஆயத்த ஆடைகள் மற்றும் பின்னலாடை ஏற்றுமதிக்கு ஜிஎஸ்டி வரியாக 5 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதோடு, லாபமும் குறைகிறது. தற்போது விதிக்கப்படும் 3 சதவிகிதமாகவோ அல்லது வரி விலக்கும் அளித்தோ பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று திருப்பூர் தொழில்துறையினரும் வர்த்தகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்