Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நந்தினி கைது - இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #ReleaseNandhini ஹேஷ்டேக்

ஜுலை 06, 2019 07:08

சென்னை : நீதிமன்றத்தை பலரும் தரக்குறைவாக விமர்சித்துவரும் நிலையில் அவர்கள் மீதெல்லாம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? தற்போது நந்தினி கேள்வி கேட்டதற்காக கைது செய்தது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

திருமணம் நடக்கவிருந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் நந்தினி கைது செய்யப்பட்டதை கண்டித்து, பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி. கல்லூரிக்காலத்தில் இருந்தே தனது போராட்டத்தை பல வடிவங்களில் நடத்தி தற்போதும் பொதுப்பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

நந்தினியின் போராட்டத்துக்கு அவரது தந்தை ஆனந்தனும் துணையாக இருந்த நிலையில், அவர் 2014-ம் ஆண்டு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். அப்போது, வழக்கில் வாதாடிய நந்தினி, ஐபிசி பரிவு 328ன் படி டாஸ்மாக் மூலமாக போதைப் பொருள் விற்கப்படுவது அல்லது விநியோகிப்பது குற்றமில்லையா? என்று கேள்வி எழுப்பினா்.

இதனால், இது போன்ற கேள்விகளை எழுப்பமாட்டோம் என்று எழுதி கையெழுத்திட்டு கொடுக்குமாறு நீதிபதி கேட்டார். ஆனால், அவர்கள் எழுதிக்கொடுக்க மறுக்கவே நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வழக்கறிஞா் நந்தினிக்கு வருகின்ற ஜூலை 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை ஜூலை 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்