Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சத்தீஸ்கரில் பெண் உள்பட 4 மாவோயிஸ்டுகளை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படை

ஜுலை 06, 2019 10:10

சத்தீஸ்கர் :சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேசமயம், மாவோயிஸ்டுகள் வன்முறைப் பாதையில் இருந்து விலகி, சரண் அடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. 

 இந்நிலையில், தம்தாரி மாவட்டம் கல்லாரி மற்றும் மேக்கா கிராமங்களுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதிரடிப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் பின்வாங்கினர். இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பெண் உள்ளிட்ட 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்து 7 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
 

தலைப்புச்செய்திகள்