Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகா அரசு கவிழுமா?- விலகும் எம்எல்ஏக்கள்

ஜுலை 06, 2019 11:39

கர்நாடகா : பெங்களூரு: குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தியில் இருக்கும் காங்., மற்றும் மஜத எம்எல்ஏ.,க்கள் 12 பேர் ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இம்மாநிலத்தில் காங்., ஆட்சி கலையும் என்ற சூழல் எழுந்துள்ளது.

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்காக காங் - மஜத கூட்டணி அமைக்கப்பட்டது. இருந்தும் தேர்தலுக்கு பிறகு ஓராண்டாக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த முதல்வர் குமாரசாமி, காங்., எங்களை செயல்படவிடாமல் கட்டுப்படுத்த பார்க்கிறது. எதிர்க்கட்சிகளும் தங்கள் அரசை செயலற்றதாக்க திட்டமிட்டுள்ளன. கூட்டணி அரசு நடத்துவது விஷத்தை விழுங்கியதற்கு சமம். இதனால் தான் பதவி விலக வேண்டியது இருக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று (6ம் தேதி) மதியம் காங்கிரஸ் தரப்பில் 9, மஜத தரப்பில்3 எம்எல்ஏ.,க்கள் சட்டசபை வளாகத்திற்கு வந்துள்ளனர். சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சபாநாயகர் அலுவலகத்தில் இல்லை. இதனால் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வின் எடியூரப்பா, லோக்சபா தேர்தல் முடிந்த ஒரு மாதத்தில் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம் என கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்