Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை -தண்ணீர் லாரிகள் நாளை ஸ்டிரைக்

ஜுலை 07, 2019 06:24

சென்னை : அரசு அதிகாரிகள் தனியார் தண்ணீர் லாரிகளை, சிறைபிடிப்பதை கண்டித்து, 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அச்சங்கம் தெரிவித்திருக்கிறது. சென்னை பள்ளிக்கரணையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 லாரிகள் உட்பட காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தனியார் தண்ணீர் லாரிகள் நீரை எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அங்குள்ள லாரிகளை உடனடியாக, அரசு அதிகாரிகள் சிறைபிடித்துவிடுவதாக, அவர் கூறினார்.

பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், அரசின் முறையான அனுமதி கிடைக்கும் வரை, நாளை முதல் தண்ணீரை எடுக்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.சங்கத்தின் இந்த அறிவிப்பால், சென்னை மக்களுக்கு தண்ணீர் விநியோகப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று தெரிகிறது.

எனவே, அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு அவசரத் தீர்வு காணவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்