Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திரா பற்றி எரியும்: சந்திரபாபு நாயுடு

ஜுலை 07, 2019 07:20

அமராவாதி : ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியான சந்திரபாபு நாயுடுவுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகளை குறைத்தார். 

எனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திரா பற்றி எரியும் என முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, 

ஜெகன் மோகன் ரெட்டி அரசு எனக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை. எனது உயிருக்கு இருக்கும் ஆபத்தை வைத்து ஆளும் கட்சி விளையாடுகிறது. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிந்தும் அரசு பாதுகாப்பை குறைத்துள்ளது. 

எனக்கு ஏதாவது நடந்தால் யாரும் அரசைக் கட்டுப்படுத்த முடியாது.  ஆந்திர மாநிலம் முழுவதும் பற்றி எரியும். ஆளும் கட்சியினர் தாக்கியதால் பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுபற்றி முதல்-மந்திரி  வாய் திறக்க மறுக்கிறார். கண்டனம் தெரிவிக்கக் கூட அவருக்கு வார்த்தை இல்லை எனவும் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் விமர்சித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்