Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தர்மபுரி மக்களுக்கு 3 எம்பிக்கள்-- திமுக எம்பி மகிழ்ச்சி

ஜுலை 08, 2019 10:04

தருமபுரி: தமிழகத்தில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் மட்டுமே 3 எம்பிக்கள் தேர்வு ஆகும் காரணத்தால் திமுக எம்பி டாக்டர். செந்தில்குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் செந்தில் குமார் வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 இதனால் அவர் எம்பியாவது உறுதியாகி உள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சந்திரசேகரும் தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மேட்டூரைச் சேர்ந்தவர் ஆவார். இதன் மூலம் நாடாளுமன்றத்திற்கு தர்மபுரியில் இருந்து மட்டுமே 3 எம்பிக்கள் கிடைத்துள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள தர்மபுரி தொகுதி எம்பி டாக்டர்.செந்தில் குமார், தர்மபுரி தொகுதி மக்களுக்கு நற்செய்தி, தர்மபுரியில் இருந்து அன்புமணி, மேட்டூர் சந்திரசேகரன், நான் உள்பட 3 பேர் எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு போகிறோம். 

எனவே தொகுதியில் வேலை வாய்பின்மையை ஒழிக்கவும், தண்ணீர் பிரச்னையை தீர்க்கவும் நாங்கள் 3 பேரும் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். அரசியலில் எதிர் அணியில் உள்ள போதிலும் தொகுதியின் நன்மைக்காக இணைந்த செயல்படுவோம் என அறிவித்த திமுக எம்பிக்கு தர்மபுரி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் தர்மபுரி ஒன்றல்ல.. இரண்டல்ல..மூன்று எம்பிக்கள் என்பது அந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியமான விஷயம் ஆகும். 

தலைப்புச்செய்திகள்