Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லியில் சோனியா- ராஜ்தாக்கரே சந்திப்பு

ஜுலை 09, 2019 06:00

புதுடில்லி: காங். மூத்த தலைவர் சோனியாவை , மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் சந்தித்தார்.

மஹாராஷ்டிராவில் செல்வாக்குமிக்க கட்சிகளில் ஒன்றான மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே காங். மூத்த தலைவர் சோனியாவை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.இதன் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் சோனியாவை ராஜ்தாக்ரே சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம், வரப்போகும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படுகிறது


 

தலைப்புச்செய்திகள்