Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போதையில் காவலர் பொது இடத்தில் தகராறு- தூக்கி சென்ற போலீஸ்

ஜுலை 09, 2019 06:21

சேலம்: "போலீசுன்னு சொல்றாரு.. முதல்ல இவரை வண்டியில ஏத்து" என்று போதையில் தகராறு செய்தவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். சேலம் ஐஆன்சன் பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திருச்சியில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு மணிகண்டன் வந்திருந்தார். அப்போது தனது நண்பர்களுடன், முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்துவிட்டதால், மணிகண்டனுக்கும் சக நண்பர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.டாஸ்மாக்கில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், ரோட்டில் போய் கொண்டிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.

 இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும், டாஸ்மாக்குக்கு மது அருந்த வந்திருந்த நபர்களும் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். ஒரு இடத்தில் நிற்கவே முடியாத அளவுக்கு தள்ளாடிய மணிகண்டனோ, தன்னை தாக்கியவர்களை பாய்ந்து பாய்ந்து அடிக்க போனார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், பொது மக்களிடம் அடி வாங்கி கொண்டிருந்த மணிகண்டனை மீட்டு, விசாரிக்க ஆரம்பித்தனர்.  உன் பேர் என்ன, எங்கிருந்து வர்ற, உன் வீடு எங்கே என்று கேட்டனர். அதற்கு மணிகண்டன் தான் போலீஸ் என்று சொல்கிறார். அதன்பிறகுதான் அவர் காக்கி பேன்ட், ஷூ அணிந்துள்ளதை மக்கள் கவனித்தனர். "போலீசுன்னு சொல்றாரு.. முதல்ல வண்டியிலே ஏத்துங்க.. விசாரிப்போம்" என்று சொல்லி போலீசார் மணிகண்டனை ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷன் கொண்டு சென்றனர். போதையில் நடந்த தகராறு குறித்து விசாரணயும் நடைபெற்று வருகிறது. 
 

தலைப்புச்செய்திகள்