Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு, நிரூபிப்பேன்- பாதிக்கப்பட்ட பெண்

ஜுலை 09, 2019 06:29

சென்னை: முகிலன் மீதான பாலியல் புகாரை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். சமூக செயற்பாட்டாளர் முகிலன். இவர் ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட நாள் முதல் காணாமல் போனார். இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் அளித்திருந்தார். 

 அந்த புகாரில் முகிலனுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் போராட்டத்தில் அவருடன் இணைந்து பங்கேற்றேன். அப்போது அடுத்த நாள் இருவரும் ஒரு விடுதியில் தங்கிய போது என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.  இது போல் பல முறை என்னை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் முகிலன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆந்திர போலீஸாரால் மீட்கப்பட்டார். 

இதையடுத்து அவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில் இந்த வழக்கு சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. பாலியல் வழக்கில் முகிலனுக்கு எதிரான ஆதாரங்கள் காட்டி அவர் மீதான குற்றத்தை நிரூபிப்பேன் என்றார். ஜோடிப்பு எனினும் இந்த புகாரை முகிலனும் , அவரது மனைவி பூங்கொடியும் மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குரல் கொடுப்பதால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற பொய்யான புகார்கள் ஜோடிக்கப்பட்டுள்ளன என முகிலனும் பூங்கொடியும் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்