Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து கல்லூரி மாணவர்களின் சமூக ஊடகங்களில் பின் தொடர முடிவு: மத்திய அரசு

ஜுலை 09, 2019 07:58

டெல்லி: நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில்  பயிலும் மாணவர்களின் சமூக வலைதள கணக்குகளை பின்தொடர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்காக அத்துறை அனைத்து சமூக வலைத்தளங்களிலும், கணக்குகளை தொடங்கியுள்ளதாகவும் அத்துடன் மாணவர்களின் கணக்குகளை இணைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கணக்கு இல்லாதவர்கள் ட்விட்டர், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் முகநூலில் கணக்கு தொடங்கவேண்டும் என்றும் அவற்றை ஜூலை 30 ம் தேதிக்குள் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்வி நிறுவனங்கள் குறித்த நல்ல செய்திகளை வாரத்தில் ஒருமுறையாவது  பதிவிட வேண்டும் என்றும் அதனை அரசு அறிந்துக்கொள்ள விரும்புவதாகவும் தெரிகிறது. ஆனால் தங்கள் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிட வாய்ப்பிருப்பதாகவும், மாணவர்களை கண்காணிக்கவே இந்த முடிவு என்றும் மாணவர்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்