Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெகத்ரட்சகனை வேலூரில் களமிறக்கிய ஸ்டாலின்- வெற்றி பெற திமுக வியூகம்

ஜுலை 10, 2019 06:38

சென்னை: வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என திட்டமிட்டுள்ள திமுக வலுவான தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.

 மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்று தனது பலத்தை தமிழகத்தில் நிரூபித்தது. வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிபெற்ற அதிமுக, வேலூரில் வெற்றிபெற்று தங்களது பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

அதிமுக கூட்டணி சார்பில் அங்கு புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பணபலத்திலும், தேர்தல் பணிகளில் வியூகம் வகுப்பதில் கைதேர்ந்தவர் இந்த ஏ.சி.சண்முகம். ஆகையால் அவரை சமாளிக்கும் விதமாக வேலூர் மக்களவை தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர்களாக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மாவட்ட செயலாளர்கள் நந்தகுமார், காந்தி, முத்துசெல்வி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

பணபலத்திலும், அரசியல் ரீதியாகவும் டி.ஆர்.பாலுவும், ஜெகத்ரட்சகனும் பலம் பொருந்தியவர்கள். அரக்கோணம் மக்களவை தேர்தலில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் அங்கு பணத்தை வாரியிறைத்தார். எதிராளிகளின் பலவீனம் அறிந்து தேர்தல் வேலைகளை முடிக்கி விடுவதில் கைதேர்ந்தவர். டி.ஆர்.பாலுவும் இவருக்கு சளைத்தவரல்ல. 

தேர்தல் பொறுப்பாளர்களாக இவர்கள் களமிறங்குவதால் வேலூர் தொகுதியில் கரன்சி மழை பொழியும் எனக் கருதப்படுகிறது. இவர்களை களமிறக்குவதன் மூலம் வேலூரில் திமுகவை வெற்றி பெறுவது உறுதி என நம்புகிறார் மு.க.ஸ்டாலின்.   

தலைப்புச்செய்திகள்