Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுயேட்சை சின்னத்தில் போட்டியிட விருப்பமில்லை- சி.ஆர். சரஸ்வதி அதிரடி

ஜுலை 10, 2019 06:46


சென்னை: இனிவரும் காலங்களில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடமாட்டார்கள் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அமமுக முடிவு எடுத்துள்ளது. வேலூர் தேர்தலில் போட்டியிடாததற்கு தேர்தல் சின்னத்தையும் கட்சியைப் பதிவு செய்வதையும் டிடிவி தினகரன் காரணமாகத் தெரிவித்துள்ளார். அமமுக போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டதால், அக்கட்சியை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பயம் காரணமாகத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து அமமுக ஒதுங்கிக்கொண்டதாகவும் விமர்சனம் செய்தன.
 
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதி வேலூர் தேர்தலில் போட்டியிடாமல் முடிவெடுத்தது பற்றி குறிப்பிட்டார். “ நாடாளுமன்றத் தேர்தலில் சின்னத்தைப் பெறுவதில் அமமுக எவ்வளவு இடைஞ்சல்களை சந்தித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். எங்களுடைய சின்னம் சுயேட்சை சின்னம் என்பதால், இரண்டாவது வாக்கு இயந்திரப் பெட்டியில்தான் சின்னம் இடம் பெற்றது. பிற கட்சிகளின் சின்னங்களைப் போல எங்களுடைய சின்னமும் முதல் பெட்டியில் இடம் பெற வேண்டும்.

அதுமட்டுமல்ல, அமமுக வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. கட்சியைப் பதிவு செய்த பிறகு எங்களுக்கென ஒரு சின்னத்தைப் பெற்ற பிறகு தேர்தலில் நிற்க வேண்டும் என்றே நிர்வாகிகள் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில்தான் பொதுச்செயலாளார் தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி, வேலூரில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். கட்சியைப் பதிவு செய்து சின்னத்தைப் பெற்ற பிறகு நடக்கும் தேர்தல்களில் அமமுக போட்டியிடும்” என்று தெரிவித்தார்.  

தலைப்புச்செய்திகள்