Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை: வியாபாரிக்கு அடி-உதை

ஜுலை 11, 2019 10:37

புதுச்சேரி: வில்லியனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு தொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி வந்தார். இதனால் வேதனை அடைந்த அந்த பெண் அவமானம் கருதி போலீசில் புகார் தெரிவிக்கவில்லை.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த வியாபாரி தொடர்ந்து அந்த பெண்ணுக்கு செல்போனில் ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசினார். நிலைமை விபரீதம் ஆவதை அறிந்த அந்த பெண் பொறுமை இழந்தார். இதுபற்றி தனது கணவரிடம் முறையிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் கணவர் மற்றும் 2 பேர் சேர்ந்து வியாபாரியை அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அந்த வியாபாரி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

புகார் மனுவில் தன்னை 3 பேர் போனில் பேசி தனி இடத்துக்கு வரவழைத்து தாக்கியதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தை வியாபாரி தெரிவிக்கவில்லை. இதைதொடர்ந்து வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்