Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

16 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்- சென்னை வெறியர்கள்

ஜுலை 11, 2019 11:11

சென்னை: 5 பேர் கொண்ட ஒரு கும்பல் ஒன்று 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கூட்டாக கற்பழித்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது. புளியந்தோப்பை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு தன் பெற்றோருடன் ஏதோ மனஸ்தாபம். அந்த கோபத்தில் சண்டை போட்டுகொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டார். இது கடந்த 3 ஆம் தேதி நடந்துள்ளது.

வீட்டில் பெண்ணை காணோம் என்று எல்லா இடங்களிலும் தேடிய பிறகு போலீசில் புகார் தந்தார்கள். இதையடுத்து போலீசாரும் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.

சம்பவத்தன்று வெளியில் வந்து விட்ட சிறுமிக்கு எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என தெரியவில்லை. அதனால் ஒரு பெண்மணியிடம், "வீட்டை விட்டு வந்துவிட்டேன், ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா" என்று கேட்டுள்ளார். அந்த பெண்மணியும் சிறுமியை அழைத்து கொண்டு, புரசைவாக்கத்திலுள்ள நிஷா என்பவரது வீட்டில் கொண்டு போய் விட்டார்.

 அந்த வீட்டில் சிறுமியை, 5 பேர் கொண்ட கும்பல் சீரழித்துள்ளது.. 5 நாட்களாகவே 5 பேர் கொண்ட அந்த கும்பலிடம் சிக்கி சீரழிந்துள்ளார் சிறுமி. இதனையடுத்து, அங்கிருந்து தப்பி தன் வீட்டுக்கே திரும்ப ஓடி வந்துவிட்டார்.

5 நாட்களாக நடந்த சித்ரவதைகளை எல்லாம் சொல்லி கதறி உள்ளார். மகள் பட்ட கஷ்டத்தை கேள்விப்பட்டு அதிர்ந்து போன பெற்றோர், உடனடியாக புளியந்தோப்பு போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சபீனா, நிஷா, முபீனா என்ற 3 பெண்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைதவிர, ஏழை சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அந்நபர்களின் பின்னணியில் இருக்கும் கும்பலை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர் காவல்துறையினர்.
 

தலைப்புச்செய்திகள்