Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களவை எம்பியானார் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்

ஜுலை 11, 2019 11:29

சென்னை: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் பொதுச் செயலாளரான சண்முகம் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார். தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச பேரவையின் பொதுச் செயலாளராக 77 வயதாகும் சண்முகம் பதவி வகித்து வருகிறார்.

 சண்முகம் தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முன்னாள் ராணுவ வீரரும் கூட கடந்த 1961-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சண்முகம் 11 ஆண்டுகள் தேசத்திற்காக பணியாற்றியுள்ளார். பின்னர் 1972-ம் ஆண்டில் சண்மும் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு பணி நிமித்தமாக தலைநகர் சென்னைக்கு வந்து குடிபுகுந்தார்.

 1977-ம் ஆண்டிலிருந்து தொழிற்சங்கத் தலைவராக விளங்கிய திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி, தொமுச பேரவைத் தலைவர் செ.குப்புசாமி ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்கப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொமுச பேரவையில் படிப்படியாக பல பதவிகளை வகித்துள்ளார் சண்முகம் தொமுச செயலாளராக 11 ஆண்டுகளும் பின் பொருளாளராக 8 ஆண்டுகளும் பதவி வகித்துள்ளார்.

 அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை தொமுச பேரவை பொதுச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.  இன்றும் பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கு பெற்று தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். தற்போது திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவையிலும் தொழிலாளர்களுக்காக இவரது குரல் ஒலிக்கும் என அனைவரின் எதிபார்ப்பாகயுள்ளது

தலைப்புச்செய்திகள்