Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனன் கேள்வி

ஜுலை 12, 2019 08:40

விஜயவாடா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர சந்திரபாபு நாயுடுவை இந்நாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கழுதை மேய்த்தீர்களா என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் 35 வருட அரசியலில் இப்படி அவலமான நிலையை பார்த்ததில்லை என சந்திரபாபு நாயுடு மிகவும் வேதனை அடைந்துள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாயு நாயுடு நேற்று விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நேற்று சட்டசபையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பொய்களை கூறி சவால் விடுகிறார். வறட்சியை பற்றி பேசுங்கள் என்று நான் சொன்னால் வேறு விஷயங்களை பற்றி பேசுகிறார். 

தெலுங்குதேசம் கட்சியை பற்றியும், என்னை பற்றியும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். நான் 35 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறேன். இப்படி ஒரு அவலமான நிலையை இதற்கு முன்பு பார்க்கவில்லை. தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவதாக கூறினால், நீஙகள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கேட்கிறார். அமைச்சர் ஒருவர் எப்போதும் பிணத்தை போல் இருக்கிறீர்களே என்று கூறுகிறார். வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் கூறுகிறார். ஆனால் யாருக்கு வழக்கப்படும் என்று தெரிவிக்கவில்லை. முதல்வருக்கு எந்தவிதமான ஞானமும் இல்லை. அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது" இவ்வாறு கூறினார்.

தலைப்புச்செய்திகள்