Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்- மத்திய அரசு

ஜுலை 12, 2019 09:46

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் தற்போது புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய தேர்வில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

முதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என்றும் உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்