Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அப்போ நாங்க எதுக்கு? எகிறிய தொண்டர்கள், சிதறுமா பாமக?

ஜுலை 12, 2019 02:47

சென்னை: அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கியுள்ளதற்கு பாமக கட்சி தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வெளியாகி வருகிறது. 
 
நடந்து முடிந்த இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. கூட்டணி ஒப்பந்தத்தின் படி பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. பாமக சார்பில் பாமக கட்சியின் தலைவர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியுள்ளார். 
 
அன்புமணிதான் எம்பி ஆவார் என கூட்டணி அமைத்த போதில் இருந்தே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாம். கட்சியின் சார்பில் அன்புமணியையே அனைத்திலும் முன்நிறுத்தினால் மூத்த தலைவர்கள் எதற்கு கட்சிகாக உழைக்கும் தொண்டர்கள் எதற்கு என கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளது. 

ராஜ்யசபாவுக்கு செல்ல அன்புமணிக்கு எல்லா தகுதிகளுமே இருக்கிறது அதற்காக அவரை மட்டுமே முன்நிறுத்துவது தவறானது என எதிர்ப்பு குரல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது சிலர் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில் இந்த பிரச்சனையால் மேலும் சிலர் வெளியேறக்கூடும் என தெரிகிறது. 
 
 

தலைப்புச்செய்திகள்