Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்பிஐ: ஆன்லைன் பணப் பரிமாற்ற கட்டணங்கள் ரத்து

ஜுலை 12, 2019 03:13

புதுடெல்லி: இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்.பி.ஐ. வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தது. அத்துடன் மொபைல் பேங்க் சர்வீஸை 1.41 கோடி பேர் பயன்படுத்துவதும் தெரிய வந்தது. அத்துடன் எஸ்.பி.ஐ  வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18% மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

மேலும், எஸ்.பி.ஐ.யின் டிஜிட்டல் செயலியான யோனோ (YONO) மூலம் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்றம் செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும்  நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டது.

இந்நிலையில், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும்  நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ இன்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்