Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூதாட்டியிடம் பரிவு காட்டிய எடப்பாடி பழனிசாமி

ஜுலை 13, 2019 09:01

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந் தேதி தென்காசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டையில் பொதுமக்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர். அப்போது பாளையங்கோட்டை சிறுதுணை நயினார் தெருவை சேர்ந்த திருப்பதி என்ற மூதாட்டி கையில் கோரிக்கை மனுவுடன் தள்ளாடியபடி வரவேற்பு மேடையை நோக்கி வந்தார்.

 இதைப்பார்த்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் மூதாட்டியை மேடைக்கு அழைத்து வரச்சொன்னார். பின்னர், அவரிடத்தில், என்ன வேண்டும்? என்று பரிவுடன் கேட்டார். அதற்கு அந்த மூதாட்டி, தனது வாழ்வாதாரத்திற்கு உதவி செய்திட வேண்டும் என்று கையில் தயாராக வைத்திருந்த மனுவை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர், இன்னும் 5 நாட்கள் கழித்து இங்கு வரும்போது என் கையாலேயே உங்களுக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்குவேன் என தெரிவித்து மூதாட்டிக்கு சால்வை அணிவித்து அனுப்பிவைத்தார். அதன்படி நேற்று தூத்துக்குடியில் நடந்த விழாவில், மூதாட்டி திருப்பதிக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். ஆணையை பெற்றுக்கொண்ட மூதாட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்