Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவிகளை கேலி, கிண்டல் செய்த 11 பேரை பிடித்து போலீசார் விசாரணை

ஜுலை 13, 2019 11:17

தருமபுரி: தருமபுரி நகரில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளிடம் இளைஞர்கள் கேலி, கிண்டல் செய்வதாக டவுன் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். சில இளைஞர்கள் மாணவிகளை தங்களது காதல் வலையில் விழ வைப்பதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி முன்பும், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பும், மாணவிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதிகளிலும் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்தனர்.

அவ்வையார் மேல்நிலைப்பள்ளி, தனியார் மகளிர் கல்லூரி ஆகிய பகுதிகளில் போலீசார் மறைந்து இருந்து கண்காணித்தபோது சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த 11 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அவர்களை பிடிக்க இன்று காலை தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது தனிப்படை போலீசார் பள்ளி, கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த இளைஞர்களை மறைந்து இருந்து மடக்கி 11 பேரை பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்