Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் லோக் அதாலக்

ஜுலை 13, 2019 11:44

சென்னை: நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக தமிழகம் முழுவதும் லோக் அதாலக் இன்று தொடங்கியது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டப்பணிகள் ஆணையக் குழுவின் சார்பில் தேசிய லோக் அதாலக் என்ற மக்கள் நீதி மன்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள் உள்ளிட்ட நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். அதன்படி, தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் லோக் அதாலக்கில் வங்கிக்கடன், காசோலை மோசடி, தொழிலாளர்கள் தகராறு, ஜீவனாம்சம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் என 2 லட்சத்து 32 ஆயிரம் வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 79,740 வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 6 அமர்வுகள் இந்த வழக்குகளை விசாரிக்கின்றனர். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் 435 அமர்வுகள், மொத்தம் 467 வழக்குகளை விசாரிக்கின்றன. திருச்சியில் நடைபெற்று வரும் மக்கள் நீதிமன்ற அமர்வுகளில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்திலும், கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட 5 இடங்களில் 18 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அமர்வுகளில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று தீர்ப்பு வழங்குகின்றனர். இதேபோல் சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலத்தில் அமைத்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 14,000 வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்