Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்சியர் வீட்டில் கோடிக் கணக்கில் பணம்

ஜுலை 14, 2019 10:22

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரில் நகைக் கடை மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்சியர் வீட்டில் கோடிக் கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் பொது மக்களிடம் நகைக் கடன் தருவதாகக் கூறி தவணை முறையில் ஆயிரத்து 640 கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டு துபாய்க்கு தப்பியோடினார். இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் மன்சூர்கானின் நகைக் கடையில் நடந்த முறைகேடுகளை மூடி மறைப்பதற்காக அவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு கலெக்டர் விஜய்சங்கரும், நான்கரை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பெங்களூரு வடக்கு மண்டல உதவி ஆணையர் நாகராஜூம் சிறப்பு விசாரணை குழு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இரண்டு பேரையும் சிறப்பு விசாரணை குழு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பெங்களூர் ஆட்சியர் விஜய்சங்கர் வீட்டில் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் மற்றும் பொருட்களை சிறப்பு விசாரணை குழு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
 

தலைப்புச்செய்திகள்