Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிருப்தி எம்எல்ஏக்கள் நிபந்தனை: நிறைவேற்ற காங்கிரஸ் உறுதி

ஜுலை 14, 2019 12:12

பெங்களூரு: அதிருப்தி காரணமாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களின் எந்தவிதமான நிபந்தனையையும் நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாக, அக்கட்சியை சேர்ந்த கர்நாடக அமைச்சர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் 13 மற்றும் மஜதவின் 3 என 16 எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். ராஜினாமா செய்தவர்களில் 10 பேர் தங்கள் கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தாமதபடுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். சபாநாயகர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 16 வரை எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா கடிதங்கள் மீதும், தகுதி நீக்கம் மனு மீதும்,சபாநாயகர் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் கட்சி முக்கிய நிர்வாகியான டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் நிபந்தனையை நிறைவேற்ற காங்கிரஸ் மேலிடம் தயாராக உள்ளது. அரசை அவர்கள் காப்பார்கள் என்ற தகவல்கள் வருகின்றன. காங்கிரஸ் சார்பில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு எதிராக அவர்கள் ஓட்டு போட்டால், பதவி பறிபோகும். எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள். நீண்ட காலம் காங்கிரசில் பணியாற்றியுள்ளனர். அவர்களின் கருத்துகளை திறந்த மனதுடன் நாங்கள் கேட்போம். அவர்கள் எங்களது நண்பர்கள். மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 


 

தலைப்புச்செய்திகள்