Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை

ஜுலை 15, 2019 03:16

புதுடெல்லி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய மருத்துவ கவுன் சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்துடன் கூடிய வரைவு மசோதா, விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்