Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு இலவச பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா

ஜுலை 15, 2019 10:53

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 10/07/2019 அன்று காலை ONGC நிறுவனத்தின் சமூக  வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு இலவச பணிப்பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

துவக்க நிகழ்ச்சியில் ரோஸ் அறக்கட்டளை இயக்குனர் ஜான் K.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றினார். ONGC துணைப்பொதுமேலாளர் ராஜாரகு தலைமை வகித்தார். மனிதவளத்துறை அலுவலர் R.பாலசுப்ரமணியன், முன்னிலை வகித்தார். 

ஜெயங்கொண்டம்  வட்டார  வளர்ச்சி அலுவலர் S. சந்தானம், துனைவட்டார  வளர்ச்சி அலுவலர் முருகானந்தம்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எல்.சண்முகம், ஆர். மணோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

ONGC பொது மேலாளர்கள் திரு K.வேலு, M.கோபிநாதன் ஆகியோர் பாதுகாப்பு உபகர்ணன்கள் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள  200 துப்புரவு பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு மேலாடை,முக மூடி,கையுறை மற்றும் தொப்பி ஆகியன வழங்கப்பட்டது.முடிவில் ரோஸ் அறக்கட்டளை திட்ட அலுவலர் M. சக்திவேல் நன்றி கூறினார்.     

இதேபோன்று ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 174 துப்பரவு பணியாளர்கள் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் உள்ள  20 துப்புரவு பணியாளர்களுக்கும் மேற்கண்ட பணிபாதுகாப்பு உபகரணங்கள் அன்று மாலை ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு பி.குருநாதன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு சம்பத், சிவதாஸ்,அருள்மேரி மற்றும் தனவேல் ஆகியோர் கலந்துகொன்டு வாழ்த்திப்பேசினர்.

 

தலைப்புச்செய்திகள்