Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் சூர்யாவை வம்புக்கு இழுத்த அன்புமணி?

ஜுலை 16, 2019 01:25

சென்னை: பாமக கட்சியின் 31 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இன்று,திருச்சியில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ் கொடி ஏற்றி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
பாமவால் தமிழகம் மட்டுமல்ல இந்தியவே மாற்றம் அடைந்துள்ளது, அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும் தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்! 
 
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக  கருத்தை இந்தியாவில் யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை குறிக்கும்வகையில் அவர் கூறினார். மேலும் புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்த பாமக குழு ஒன்றை அமைத்துள்ளோம். 

அந்த குழுவின் அறிக்கையை மத்திய மாநில அரசிடம் அளிப்போம் என்று தெரிவித்தார். மருத்துவ படிபிற்கான நீட் தேர்வுகள் போல எக்சிட் போன்ற தேர்வுகள் தனியார் பயிற்சி மையம் உருவாக்கவே வழிசெய்வதாக அமையும் என்று கூறினார். 
 
நடிகர் சூர்யாவை குறிக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளதற்கு சூர்யாவின் ரசிகர்கள் பலரும் அவரது பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்