Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலை நடத்தினால்தான் தமிழகத்துக்கு நிதி: மத்திய மந்திரி

ஜுலை 16, 2019 01:50

சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வருகிற அக்டோபர் மாதம் வரை அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் பல பணிகள் முடங்கி கிடப்பதாகவும், நிதிகள் ஒதுக்குவதில் பிரச்சினை இருப்பதாகவும் தி.மு.க. எம்.பி. அ.ராசா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறும்போது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால் மத்திய அரசு நிதி ஒதுக்க முடியாது என்றார்.

தலைப்புச்செய்திகள்