Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை உறுதி செய்வோம்: அமித்ஷா

ஜுலை 17, 2019 12:12

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  இன்று மக்களவையில், பேசும் போது கூறியதாவது:-

பாரதிய ஜனதா  அரசு நாடு முழுவதும் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்ஆர்சி) அறிமுகப்படுத்தவும், இந்தியாவில்  சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் நாடு கடத்தவும் உறுதிபூண்டுள்ளது.

"தற்போது என்.ஆர்.சி அசாம் உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும்." இந்த அரசு  அதன் தேர்தல் அறிக்கையின்படி - இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை  உறுதி கூறுகிறது.

அத்தகைய குடியேறியவர்கள் அனைவரும் சர்வதேச சட்டத்தின்படி நாடு கடத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என கூறினார்.

நடைமுறையில் "நியாயத்தை கடைப்பிடிப்பதற்காக" அசாமில் இறுதி என்.ஆர்.சி.யை விடுவிப்பதற்கான ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில்  அறிவித்த சிறிது நேரத்திலேயே உள்துறை அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்