Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துப்பாக்கி டான்ஸ் எம்.எல்.ஏ கட்சி இடைநீக்கம்

ஜுலை 18, 2019 04:36

புதுடில்லி: உத்தரகண்டில் நடைபெற்ற விருந்தில், கையில் துப்பாக்கிகளுடன் நடனமாடி சர்ச்சையில் சிக்கிய, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரணவ் சிங், கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.ஏற்கனவே காங்., - எம்.எல்.ஏ.,வாக இருந்த இவர், 2016ல் பா.ஜ.,வில் இணைந்தார். அதிரடியான செயல்களால், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்.கடந்த மாதம், டில்லியில், பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதற்காக, இவரை மூன்று மாதங்களுக்கு, பா.ஜ., தலைமை ஏற்கனவே, 'சஸ்பெண்ட்' செய்திருந்தது.இந்நிலையில், கடந்த வாரம், உத்தரகண்டில் நடந்த ஒரு விருந்தில் பங்கேற்ற பிரணவ் சிங், கையில் துப்பாக்கிகளை ஏந்தியபடி நடனமாடினார்.இந்த 'வீடியோ' சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, எம்.எல்.ஏ.,வின் பொறுப்பற்ற செயலுக்கு, பல்வேறு தரப்பினரும், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, பிரணவ் சிங்கிடம், 'கட்சியில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது?' என விளக்கம் கேட்டு, பா.ஜ., தலைமை, 'நோட்டீஸ்' அனுப்பியது.இந்நிலையில், 'தொடர்ந்து ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் எம்.எல்.ஏ., பிரணவ் சிங், ஆறு ஆண்டுகளுக்கு, கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்' என, உத்தரகண்ட், பா.ஜ., தலைவர், அஜய் பட் நேற்று அறிவித்தார்.


 

தலைப்புச்செய்திகள்