Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மேற்கு வங்காளத்தில் நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்

ஜுலை 19, 2019 04:16

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் பா.ஜனதா கணிசமான இடங்களை பெற்றதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. 

அந்த வரிசையில் வங்காள மொழி நடிகர்-நடிகையர் 12 பேர் நேற்று பா.ஜனதாவில் இணைந்தனர். இதில் ரிஷி கவுசிக், காஞ்சனா மொய்த்ரா, ருபஞ்சனா மித்ரா, பிஸ்வஜித் கங்குலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர்களாகிய அவர்கள் கட்சியின் மாநில தலைவரான திலிப் கோஷ் முன்னிலையில் டெல்லியில் இணைந்தனர். அவர்களை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

தலைப்புச்செய்திகள்