Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரிச்சியூர் செல்வமும் அத்திவரதர் தரிசனமும்

ஜுலை 19, 2019 05:40

சென்னை: பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்ய அழைத்து வந்ததே திமுகதான் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியுள்ளார். வரிச்சியூர் செல்வம் மதுரையின் பிரபலமான ரவுடி. கழுத்து நிறைய நகைகளுடன் வலம் வரும் நடமாடும் நகைக்கடை. கலர்புல் டிரஸ் போட்டுக் கொண்டு, சொகுசு கார்களில் வலம் வருவது இவரது பாணி. தம்மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் இருக்கின்றன என்ற உறுத்தலே இல்லாதவர். பலமுறை மாமியார் வீட்டுக்குபோய் வந்தவர். கடைசி நேரங்களில் 
போலீசாரின் என்கவுன்டரில் 3 முறை மிஸ். ஆகி எஸ். ஆனவர். 

 இப்போதைக்கு திருந்தி வாழ்கிறேன் என்று சொன்னாலும் அதை ஏற்க யாருமே தயாராக இல்லை. கடந்த 4 நாட்களாக இந்த வரிச்சியூர் செல்வத்தை பற்றிதான் தமிழக மக்கள் முணுமுணுத்து வருகிறார்கள். அத்திவரதரை தரிசிக்க இவருக்கு விவிஐபிக்கள் பாஸ் தரப்பட்டுள்ளது என்பதே அது. ஒருநாளைக்கு லட்சக்கணக்கான பேர் அல்லல்பட்டு, அவதிப்பட்டு, காஞ்சிபுரம் வந்து தரிசித்து செல்கிறார்கள். எத்தனையோர் கூட்ட நெரிசலால் தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். 

நேற்று ஒருநாள் மட்டும் 4 பேர் நெரிசலில் சிக்கி இறந்தே போயுள்ளனர்.  இந்நிலையில், செல்வத்துக்கு எப்படி விவிஐபி கிடைத்தது?  நம் குடியரசு தலைவர் சென்று வந்ததைபோலவே இவரும் அதே வரிசையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகாக்களுடன் உள்ளே சென்று சகல மரியாதையாக தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் சன்னதி முன்பு ரவுடியை உட்கார வைத்து பட்டம், பரிவட்டம் கட்டி அர்ச்சர்கள் முதல் மரியாதை தந்துள்ளனர். விசாரணை இந்த வீடியோ வைரலானதும் விவகாரமும் பெரிதானது. 

வரிச்சியூர் செல்வத்துக்கு கிடைத்த விவிஐபி பாஸ் யார் தந்தது? எப்படி கிடைத்தது? அது போலியானதா? என்று அதிகாரிகள் இப்போது விசாரணையை கையில் எடுத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் பொன்னையா விளக்கம் அளித்துள்ளார். கலெக்டர் "வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்யும் விவகாரம் என் கவனத்துக்கும் வந்தன. அந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாம். அதில் திமுக பிரமுகர்கள்தான் ரவுடியை அழைத்து வருகிறார்கள். உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அவரை அனுமதித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்றார். 

திமுக கலெக்டர் இப்படி சொன்னதும், இந்த விஷயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ரவுடிகள் கட்சி என்று திமுகவை சொல்வார்கள் என்றாலும், இவ்வளவு பகிரங்கமாக இந்தியாவே உற்றுநோக்கும் அத்திவரதர் சன்னிதானத்துக்கு அழைத்து வருவார்களா என்பது தெரியவில்லை. ஒருவேளை திமுகவே ரவுடியை அழைத்து வந்திருப்பதாகவே வைத்து கொண்டாலும், அனுமதி சீட்டு இல்லாத நிலையில் போலீசார் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்பதுதான் அனைவரின் கேள்வியாகயுள்ளது
 

தலைப்புச்செய்திகள்