Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு

பிப்ரவரி 19, 2019 05:24

புதுடெல்லி: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், ஜெயலலிதா மரண ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. தர்மபுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.  

இதை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தும், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.  

இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சஞ்ஜய்கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விஜயகாந்த் தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி, ஜெயலலிதா மரணம் அடைந்ததால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், ஜெயலலிதா மரணம் தொடர்பான சட்டப்பூர்வமான ஆவணங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு விஜயகாந்த் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்