Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உலகுக்கு தெரியாத அண்ணாச்சியின் மற்றொரு முகம்: புகழ்ந்து தள்ளிய அமெரிக்காவின் நியூ யார்க் டைம்ஸ்

ஜுலை 19, 2019 09:55

சென்னை: உலகம் முழுவதும் ஹோட்டல் நடத்தி வரும் மறைந்த அண்ணாச்சியை பற்றி Mcdonalds  அதிகாரிகள், அவரின் ஆளுமையை நிர்வாகத் திறமையையும், வாடிக்கையாளர்களுக்கு வாயார உணவளித்ததை பற்றி  அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியுள்ளனர். அண்ணாச்சி மறைந்த விஷயம் உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது காரணம் தமிழக உணவை உலகம் முழுவதும் ருசிக்க செய்தவர். லெக்சிங்டன் அவென்யூ 26-வது தெருவில் தொடங்கப்பட்ட சரவணபவன்க்கு எந்தவித விளம்பரமும் இல்லை, தமிழர்கள் மட்டுமல்ல அந்த ஊரை சேர்ந்தவர்களும் அதிகம் வரிசையாக சாப்பாட்டுக்கு கால் கடுக்க நிற்பார்கள்.

இந்தியாவில் 33 கிளைகளும், 12 நாடுகளில் 47 கடைன்னு பெரிய சைவ உணவுக்கு பெரிய சாம்ராஜ்யமே அமைத்துள்ள நம்ம அண்ணாச்சியின் அருமை பெருமைகளை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது அமெரிக்காவின் புகழ் பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. அதெப்படி நம்ம அண்ணாச்சியை பத்தி அமெரிக்காவுல இருக்குற பத்திரிக்கை எழுதியிருக்காங்கன்னு நீங்க கேட்கலாம் அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள் ஏற்கனவே சுவைத்திருக்கும் தமிழக உணவுகள் பற்றிய தகவல்களால் மட்டுமே நியூயார்க் நகரில் உள்ள சரவணபவனின் கூட்டம் தெறிக்கிறது. தங்க பான் கேக்கு போல தோசை, டோக்நட் மாதிரி நன்கு பொரித்த மொறு மொறு வடை  , மசால் தோசைக்காக ப்ப்பா  என என தாறுமாறாய் புகழ்ந்து தள்ளியுள்ளது.

சரவணபவன் உணவகத்துக்குப் பின்  அழுத்தமாக ஒளிந்திருக்கும் சமூக நீதி பற்றி நியூ யார்க் பல்கலைக்கழகத்தில், உணவுக் கல்வி பேராசிரியரான கிருஷ்ணந்து ரே தெளிவாக யாரும் தெரியாத சில ரகசியத்தை வெளியிட்டுள்ளார். நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சென்னை போன்ற மிகப் பெரிய பொருளாதார ரீதியில் முக்கியமான நகரத்தில் கூட உணவகங்களே இல்லை. காரணம் அப்போது இந்திய கலாச்சாரத்தில் 20-ம் நூற்றாண்டு தொடக்க காலங்களில் வெளியில் சாப்பிடுவது தவறு என்ற கோணத்தில் பார்க்கப்பட்டது. அப்போது  அதே சில முன்னேறிய வகுப்பினர்கள் தங்கள் சமூகத்துக்காக மட்டுமே  உணவகங்களைத் திறந்தார்கள். இந்த முன்னேறிய வகுப்பினர்கள், மற்ற சமூகத்தினர்கள் சமைத்த உணவைச் சாப்பிடுவது தவறு என்கிற கருத்து நிலவியதால் முன்னேறிய வகுப்பினர்களால், முன்னேறிய வகுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட உணவகங்கள் தான் சென்னையில் இருந்தது.

ஆனால் அண்ணாச்சி முன்னேறிய வகுப்பைச் சாராதவர் என்பதால், முன்னேறிய சமூகத்தினரால் நடத்தப்பட்ட உணவகங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த கால கட்டத்தில் தான் சென்னையில் உணவகங்கள் துறை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. அப்போது 1981-ல் தொடங்கப்பட்டது  சரவணபவன். ராஜகோபால் அண்ணாச்சி. நெருப்பு சம்பந்தப்பட்ட துறையில் வியாபாரம் தொடங்கினால் ஜெக ஜோதியாக வருவீர்கள் எனச் சொல்லி இருக்கிறார் குடும்ப ஜோசியர்,  ஜோசியரிடம் பிசினஸ் ஆலோசனை கேட்டு 1981-ஆம் ஆண்டில் கே கே நகரில் ஹோட்டல்  தொடங்கியிருக்கிறார்.

கே கே நகரில் கடை போட்டால் எல்லாம் மட்டும் போதுமா..? வாடிக்கையாளர்கள் சாம்பார்ன்னா இதான்யா சாம்பர் என பாராட்டினால் முடிந்ததா? அப்போது தான் ஆரம்பமானது பிரச்னை, மிகவும் தரமான எண்ணெய், ஃப்ரஷ் காய்கறிகள், பக்குவமாக அரைத்த மாவில் இட்லி தோசை என தரத்தில் சமரசம் இல்லாமல் சாப்பாடு போட்டுள்ளார் நம்ம அண்ணாச்சி. வியாபாரத்தில் பெரியதா நஷ்டம் .இந்த பிரச்னையை சரி செய்ய, சரவணபவனுக்குள் ஒரு நிதியியல் ஆலோசகர் வருகிறார். வந்த உடன் கொஞ்சம் விலை மலிவான பொருட்களை வாங்கி சமைக்க சொன்னது, ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து கொடுக்க சொன்னது என எல்லாம் அண்ணாச்சி ஒத்து வராத ஐடியாவை கொடுக்கிறார். அடுத்த மாதமே நிதியியல் ஆலோசகரை அனுப்புகிறார்.

என்ன செய்து லாபம் பார்ப்பது என்கிற யோசனையில் கடையை நடத்திக் கொண்டிருந்த அண்ணாச்சி. சரவணபவன் என்கிற பெயர் அடுத்த சில மாதங்களில் மெல்ல மெல்ல சென்னை முழுக்க மன்னிக்கவும் மெட்ராஸ் முழுக்க பரவுகிறது. வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது ஆகையால் செலவு குறைகிறது. சென்னையில் மதிய உணவு சரவணபவன் -ல தான் சாப்பாடு என்கிற அளவுக்கு வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு வாயார சாப்பாடு போட்டுள்ளார் அண்ணாச்சி. தொடர்ந்து லாபம் பார்த்தஅண்ணாச்சி, அடுத்தடுத்து சென்னை முழுவதும் அடுத்தடுத்து பல கிளைகளைத் தொடங்குகிறார். 

தமிழக உணவகத் தொழிலாளர் நலனில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வந்த அண்ணாச்சி,. தன் ஹோட்டல் ஊழியர்களுக்கு இலவச மருத்துவம், ஊழியர்களின் மகள்களுக்கான திருமணத்துக்கு நிதி உதவி, வீட்டுக்காக கொஞ்சம் நிதி என அண்ணனாக இருந்து ஊழியர்களைப் பார்த்துக் கொண்டார்.அண்ணாச்சியை ரோல் மாடலாக எடுத்து விளங்கும் முருகன் இட்லிக் கடையின் உரிமையாளர் மோகன்;  ஒரு காலத்தில் இந்த உணவகத் துறை ஒரு சில சமூகத்துக்கு மட்டுமே கதவு திறந்தது. அந்தக் கதவுகளை உடைத்தெறிந்து எங்களைப் போன்ற மற்ற சமூகத்தினரும் இன்று இந்திய உணவு வியாபாரத்தில் இருக்கிறோம் என்றால் அண்ணாச்சி ராஜகோபாலின் பங்கு மிகப் பெரியது எனப் புகழ்கிறார். ஆனால் பாருங்க முருகன் இட்லிக் கடை சரவணபவன்-க்கு நேரடி போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டு , சென்னை மயிலாப்பூர் சரவணபவன் ஹோட்டலுக்கு, உலகின் மிகப் பெரிய உணவு நிறுவனங்களில் ஒன்றான Mcdonalds-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மூன்று பேர் வருகிறார்கள். அப்போது மொத்த சரவணபவன் ஹோட்டலுக்கும் ஒரே ஒரு குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 2000 - 4000 பேர் வந்து சாப்பிடும் இடத்தில் ஒரே ஒரு குளிர் சாதனப் பேட்டி. அதிலும் அன்றைக்கான காய்கறிகள் மட்டும் தான் இருக்கிறது. இதைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட அவர்கள் தினமும் ப்ரெஷ்ஷாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கிறார்கள் என பார்த்து வியந்து போய் இருக்கிறார்கள் Mcdonalds அதிகாரிகள். 

வேலைகள் எல்லாம் முடிந்த பின் ஓய்வாக நம் சரவணபவன் அண்ணாச்சி, அந்த மூன்று Mcdonalds ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளுக்கு வகுப்பெடுத்தாராம். இட்லி தோசைக்கு மாவை தினமும் அறைப்பது, தினமும் காய்கறிகளை வாங்கி வருவது என எல்லாவற்றையும் சொன்னாராம். Mcdonalds அதிகாரிகளுக்கு இருக்கும் அனைத்து சந்தேகங்களுகும் அண்ணாச்சி ராஜகோபாலிடம் ஒரு தீர்வு இருந்ததாக அண்ணாச்சியின் அருமை பெருமைகளை நியூ யார்க் டைம்ஸிடம் சொல்லி இருக்கிறார் அண்ணாச்சியிடம் பாடம் கற்றுக்கொண்ட அந்த Mcdonalds அதிகாரிகள்.
 

தலைப்புச்செய்திகள்