Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போளூர் பேருராட்சியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: உதவி இயக்குனர் திருஞானம் துவக்கி வைத்தார்

ஜுலை 20, 2019 01:14

போளூர்: போளூர் பேருராட்சியில் பார்க் குளம் ஏரிகளில்50ஆயிரம் மரக்கன்றுகள் நடும்திட்டத்தை பேருராட்சிகளின்  உதவி இயக்குனர் திருஞானம் துவக்கிவைத்தார்.

போளூர்ர் பேருராட்சி பகுதிகளில் உள்ள பார்க் இடங்கள் குளங்கள் ஏரிபகுதிகள் மற்றும் மின்பாதைசெல்லாத சாலைகளில் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கவிழா நடைபெற்றது.

விழாவிற்க்கு பேருராட்சிசெயல் அலுவலர் முஹம்மத் ரிஸ்வான் தலைமை தாங்கினார் பேருராட்சிதுப்புறவு ஆய்வாளர் ரவிக்குமார் முன்னிலைவகித்து வரவேற்றார். 

போளூர் பேருராட்சியில் உள்ள பேருராட்சி அலுவலகம் நல்லதண்ணீர் குளம் காந்திபார்க் வசந்தம் நகரில் உள்ளபார்க் இடங்கள் ஏரிகரை பகுதி உள்ளிட்ட இடங்களில் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டதை வேலூர் மண்டல பேருராட்சிகளின் உதவிஇயக்குனர் திருஞானம் கலந்துகொண்டு மரகன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

மேலும் பேருராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்புகட்டமைப்பு வசதிகள் எந்த எந்த இடங்களில் சிறப்பாக உள்ளது இல்லாத இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள்மீண்டும் செயல்படுத்துவது மழைநீர் கட்டமைப்பு வசதி இல்லாத வீடுகளில் ஒன்றிணைத்து ஓர் இடத்தில் கட்டமைப்பு வசதியை செயல்படுத்துவது குறித்து  மண்டல பேருராட்சிகளின் உதவிஇயக்குனர் திருஞானம் தெரிவித்தார்.  

தலைப்புச்செய்திகள்