Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கஜா புயல் நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து

ஜுலை 23, 2019 10:26


சென்னை: கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை, திருவாரூர் ,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தனர். இதனிடையே நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், வழக்குப்பதிவும் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு தடைகோரி 140 பேர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கினார். 

அதில் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். அதே வேளையில் இந்த போராட்டத்தில் காவல்துறை வாகனத்தை சேதப்படுத்திய 60 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்