Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் தந்தையும், மகளும் பலி

ஜுலை 23, 2019 12:56

திருவண்ணாமலை: போளூர் அடுத்த ரெண்டேரிபட்டுவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள்  ராஜேஸ்வரி. இவரை ஐந்து வருடத்துக்கு முன்பு கலசப்பாக்கம் தாலுக்கா  கூட்றம்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிரத்தினம் மகன் அய்யப்பனுக்கு(31) திருமணம் முடித்து வைத்தார். 

ஐயப்பன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் தையல் காரராக பணிபுரிந்து வருகிறார். அய்யப்பனுக்கும் ராஜேஸ்வரிக்கும் திவ்யதர்ஷினி என்ற நான்கு வயது மகள் உள்ளார். தற்போது ராஜேஸ்வரி நிறைமாத  கர்ப்பிணியாக இருப்பதால் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் குழந்தை திவ்யதர்ஷினியும் உள்ளார்.

திருப்பூரில் வேலை செய்து வந்த  ஐயப்பன் ரெண்டேரிப்பட்டில் இருக்கும் தனது மனைவியையும், குழந்தையும் பார்க்க இன்று வந்தார். வீட்டில்  தனது மகள் தின்பண்டம் கேட்கவே, குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு போளூர் வந்து குழந்தைக்கு தேவையானதை வாங்கித் தந்துள்ளார். 

பின்னர் ரெண்டேரிபட்டு திரும்பும் போது செலவாதத்தம்மன் கோவில் அருகில் சாலையோர பள்ளத்தில் வண்டி தடுமாறி கவிழ்ந்தது. இதனால் தூக்கியெறியப்பட்ட ஐயப்பன் தலையில் பலத்த காயம் பட்டு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழே விழுந்ததில் குழந்தை அதிர்ச்சியில் மயக்கமானது.

 மயக்கமாக இருந்த குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது  குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அய்யப்பனின் தந்தை முனிரத்தினம் போளூர் காவல் நிலயத்தில் புகார் கொடுத்ததில் பேரில், எஸ்.ஐ.கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து இருவரது பிரேதத்தையும் கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

தலைப்புச்செய்திகள்