Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்தார் படேல் சிலையை வடிவமைத்தவருக்கு விருது

பிப்ரவரி 19, 2019 07:47

புதுடில்லி : குஜராத்தில் அமைந்து உள்ள, சர்தார் படேல் சிலையை வடிவமைத்த, ராம் வான்ஜி சுதார் உள்பட, மூவருக்கு, கலாசார ஒருமைப்பாட்டுக்கான, தாகூர் விருது வழங்கப்பட்டது. 

கலாசார ஒருமைப்பாட்டுக்கான தாகூர் விருது வழங்கும் விழா, டில்லியில் நேற்று நடந்தது. கடந்த, 2014 - 16ம் ஆண்டுகளுக்காக, இந்த விருது வழங்கப்பட்டது. 
மணிப்பூரைச் சேர்ந்த நாட்டிய கலைஞர், ராஜ்குமார் சிங்கஜித் சிங்குக்கு, 2014ம் ஆண்டுக்கும்; 'சயானத்' என்ற, வங்கதேச கலாசார அமைப்புக்கு, 2015ம் ஆண்டுக்கும் விருது வழங்கப்பட்டது. 

குஜராத்தில் உலகிலேயே மிக உயரமாக, சர்தார் வல்லபபாய் படேல் சிலையை வடிவமைத்த, சிற்பக் கலைஞர் ராம் வான்ஜி சுதாருக்கு, 2016ம் ஆண்டுக்கும் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி உட்பட பல வெளி சக்திகள் தாக்குதல் இருந்தபோதும், இவை அழியாமல் நிலைத்து நிற்கின்றன. இதற்கு, விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் போன்றோரின் பங்களிப்பு முக்கிய காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்