Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முறையான ஆவணம் இன்றி வாகனம் இயக்க ஓட்டுனர்களுக்கு பள்ளி நிர்வாகம் மிரட்டல்

ஜுலை 25, 2019 09:54

சென்னை: சென்னையில் ஆவணம் இன்றி வாகனம் இயக்க மறுத்த ஓட்டுனர்களுக்கு பள்ளி நிர்வாகம் மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் முறையான ஆவணம் இன்றி பள்ளி பேருந்தை இயக்க முடியாது என கூறிய வாகன ஓட்டுனர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்காமல் தனியார் பள்ளி நிர்வாகம் மிரட்டல் விடுப்பதாக வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை மேடவாக்கம் அடுத்த ஜெல்லடன்பேட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து அங்கு பேருந்து மற்றும் வேன் உட்பட சுமார் 32 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அவற்றில் 6 வாகனங்களுக்கு மட்டும் உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து வாகனங்களும் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வருவதாக அங்குள்ள வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். 

இதை தொடர்ந்து ஆவணம் இன்றி செல்லும் வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதால் வாகன ஓட்டுனர்கள் பணியில் இருந்து விலகிக் கொள்வதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கடந்த இரண்டு மாதமாக உரிய சம்பளத்தை வழங்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகவும் மேலும் தங்களுக்கு மிரட்டல் விடுவதாகவும் பள்ளி வாகன ஓட்டுனர்கள் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இதை அடுத்து சம்பளம் வழங்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கேட்கும் போது பணியில் உள்ளவர்களுக்கே ஊதியம் வழங்க முடியவில்லை என்றும் இதில் பணியை விட்டு சென்றவர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்குவது என்று நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்