Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பின்னாடி பேசி கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர் விளைவு: 3 பேர் பலி

ஜுலை 25, 2019 12:33

திருப்பூர்: பின்னாடி உட்கார்ந்து இருந்தவர்களிடம் பேசிக் கொண்டே பஸ் ஓட்டினார் டிரைவர்.. இதனால் எதிரே வந்த காரை கூட பார்க்காமல் நேருக்கு நேராக போய் மோதியதில், காரில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

தாராபுரம் திருப்பூர் சாலையில் உள்ள காதபுள்ளபட்டி அருகே நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி எதிரே ஒரு அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பஸ் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணம் செய்த வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவலன் 30, சிவனேசன் 26 ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ராஜபாண்டி மற்றும் சுரேஷ் பாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுரேஷ் பாண்டி என்பவர் உயிரிழந்தார். ராஜபாண்டி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதில், பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், பின் பக்கம் உட்கார்ந்திருந்த பயணிகளிடம் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டி வந்ததாகவும், அதனாலேயே எதிரே வந்த காரை கவனிக்காமல் போய் மோதிவிட்டதாகவும் முதல்கட்டமாக தெரியவந்துள்ளது.

காரில் பயணம் செய்த 4 பேரும் வத்தலக்குண்டு தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் INGIA என்ற எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் பணியாளர்கள் என்பதும், திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனியின் ஒப்பந்த பணியை முடித்து விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்ததனர் என்பதும் தெரியவந்துள்ளது. தொடந்து விசாரணை நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்