Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனநல மருத்துவமனையில் பேராசிரியை நிர்மலா தேவி

ஜுலை 26, 2019 01:54

திருநெல்வேலி: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி, நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலாதேவி சிறையில் அடைக்கப்பட்டிருந்து பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். வழக்கு விசாரணைக்காக அண்மையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், நீதிமன்ற வளாகத்தில் திடீரென தியானத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது, தன் மீது புகார் கொடுத்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும்  வழக்கிலிருந்து தாம் விடுதலையாகி விட்டதாகவும் அவர் கூறினார். 

அதன் பின்னர், அன்று இரவே அருப்புக்கோட்டை தர்காவில், தலைவிரி கோலமாக அமர்ந்திருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவனையில் நிர்மலாதேவி சேர்க்கப்பட்டுள்ளார். மனஅழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  


 

தலைப்புச்செய்திகள்