Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிறிஸ்தவ மிஷினரி அணியைத் தொடங்கிய பாஜக

ஜுலை 27, 2019 01:57

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருப்பதால், அங்கு வாக்குவங்கியை அதிகரிக்க இளைஞரணி, விவசாய அணியைப் போல கிறிஸ்தவ மிஷினரி அணியை பாஜக தொடங்கியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 90 சதவிகித மக்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் மிசோரம் மக்கள் முன்னணி கட்சி ஆட்சியமைத்தது. 39 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 1 இடங்களில் வென்றது.

பாஜக வென்ற சக்மா தொகுதியில் இந்துக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். மக்களவை தேர்தலிலும் பாஜக மூன்றாவது இடத்தையே பிடித்தது. மற்ற அனைத்து வடகிழக்கு மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இருக்கும் நிலையில், மிசோரமையும் வளைக்க பாஜக புது முடிவை எடுத்தது.

விவசாய அணி, இளைஞரணி ஆகியவற்றைப் போல மிஷினரி அணியை பாஜக கடந்த புதன் கிழமை தொடங்கியுள்ளது. இந்துக்களின் கட்சி என்ற அடையாளத்தை மாற்ற பாஜக, இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

லால்ஹிரியதெரங்கா என்பவரின் தலைமையில் இந்த மிஷினரி அணி அமைக்கப்பட்டுள்ளது. மிசோ இன மக்கள் மத்தியில் லால்ஹிரியதெரங்காவுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும் நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு தந்தது. ஆனால், இதை ஏற்க லால்ஹிரியதெரங்கா மறுத்து சுயேட்சையாக போட்டியிட்டார்.

இந்த நிலையில், திடீரென அவர் பாஜகவில் ஐக்கியமாகி பாஜக கிறிஸ்தவ மிஷினரியின் தலைவராகியுள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்