Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் வீரர்கள்: உள்துறை அமைச்சகம்

ஜுலை 27, 2019 06:31

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் தீவிரவாத  தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்ற பிறகு காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் அமித்ஷா, 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். மாநிலத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார்.

அங்கு தற்பாது அம்ரநாத் புனித யாத்திரை நடந்து வரும் நிலையில் அதற்கு தீவிர  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்காகவும் கூடுதலாக 10 ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்களை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீரில் ஏற்கெனவே 40 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் காஷ்மீர் சென்று வந்த பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இதுபோன்று காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்