Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக கூட்டணியில் சேரவிருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம்?

ஜுலை 27, 2019 06:59

பெங்களூரு: காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி கடந்த 15 மாதங்களாக கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வந்தது. அக்கூட்டணியில் உள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக கூட்டணியில் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து மதசார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் ஜி.டி. தேவ கவுடா கூறுகையில், “எங்கள் கட்சியின் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்படி ஆலோசனை கூறியுள்ளனர். மற்றவர்கள், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு கட்சியை வளர்க்க பரிந்துரைத்துள்ளனர்” என்றார்.
 

தலைப்புச்செய்திகள்