Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஜுலை 27, 2019 07:14

கடலூர்: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர், திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி பகுதியில் நகை கடை வைத்துள்ளார். நேற்று நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த இரும்பு பெட்டகத்திலிருந்து, 40 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துள்ளனர். 

கடை உடைத்திருப்பதை கண்டு இன்று காலை சங்கருக்கு, பக்கத்து கடை உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி சென்று பார்த்த சங்கர், இது குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தீவிரமாக போலீஸார் தேடிவருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்