Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கதவு, ஜன்னல் மூடப்பட்ட நிலையில் மாஜிஸ்திரேட்டிடம் முகிலன் ரகசிய வாக்குமூலம்

ஜுலை 27, 2019 11:49

திருச்சி: கோர்ட்டு அறையின் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்ட நிலையில், சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் முகிலன் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளர். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எக்மோர் ஸ்டேஷனில் மாயமானார். அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனில் போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

எழும்பூர் சிபிசிஐடி ஆபீசிலும் வைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 9-ந்தேதி நடுராத்திரி கரூர் மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை, 24-ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

திருச்சி சிறையில் இருந்து நேற்று மாலை 3.30 மணி அளவில் போலீசார் திடீரென முகிலனை திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு திருவேணி முன் ஆஜர்படுத்தினார்கள்.

கோர்ட்டு அறைக்குள் வந்ததும் மாஜிஸ்திரேட்டு திருவேணி, முகிலனை ஒரு பெஞ்சில் உட்காரும்படி கூறினார். இதனை தொடர்ந்து அவரிடம் உடல் நலம், குடும்ப சூழல் தொடர்பாக சில கேள்விகள் கேட்டார். சிறையில் நல்ல முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்றும் கேட்டார். அதற்கு முகிலன் உணவு நன்றாக வழங்குவதாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து ஒரே ஒரு பணியாளரை தவிர மற்ற பணியாளர்கள் மற்றும் வக்கீல்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கோர்ட்டு அறையின் கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டன. சுமார் 2 மணி நேரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் முகிலன் அளித்த ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முகிலனின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து திருச்சி ஜெயிலர் ரமேஷிடம் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார். கோர்ட்டில் இருந்து முகிலன் வெளியே வந்தபோது, "சிறையில் 22-ந்தேதி நடந்தது என்ன என்பதை நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருக்கிறேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்" என்றார்.

தலைப்புச்செய்திகள்